புதிய வருடத்தின் முதல் மாதம் முடிந்துவிட்டதும் சென்ற வருடத் தில் கலக்கலாகப் பெயர் வாங்கிய நிறுவனங்கள், சாதனங்கள், மனிதர்கள்பற்றிய செய்திகள் வெளியாவது உண்டு. நான் கவனித்த வகையில், 2010-ல் இணைய உலகில் குறிப்பிடத்தக்கவையாகப் பார்க்க வேண்டிய சிலவற்றில் இரண்டை இந்த வாரம் பார்க்கலாம்.
கோபக்காரப் பறவைகள்: காச்மூச்செனக் கத்திக்கொண்டு இருக்கும் பறவையைக் கவணில் அமர்த்தி, லேசாக இழுத்துச் செலுத்த... அது, எதிரே தேமே என உட்கார்ந்திருக்கும் பன்றிகளின் மேல் விழுந்து, வீர மரணம் எய்துகிறது. காரணம், இந்த சோம்பேறிப் பன்றிகள் தங்களது முட்டைகளைத் திருடிச் சென்றுவிட்டனவாம். இந்த தற்கொலைப் படையில் சில பறவைகள் ஏவுகணைபோலத் தாக்கி மரணம் அடையும்; சில குண்டு வீசும். 'கிறுக்குத்தனமா இருக்கே!’ என்று உங்கள் மனதில் ஓடும் எண்ணம், இதை எழுதும்போதே எனக்கு மானசீகமாகக் கேட்கிறது. அது உண்மையும்கூட. ஆனால், 2010-ல் மிகச் சிறந்த மொபைல் விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது இந்த 'கோபக்காரப் பறவைகள்’தான்! ஐ-பேட் சாதனத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள 5 அமெரிக்க டாலர்கள் கட்டணம். ஆப்பிளின் மொபைல் சாதனங்கள் மட்டும் அல்லாமல், கூகுளின் ஆண்ட்ராயிட், நோக்கியா, பாம் எனப் பல தளங்களில் கிடைக்கும் கோபக்காரப் பறவைகளை 2010-ல் மட்டும் 35 மில்லியன் மக்கள் வாங்கியிருக்கிறார்கள். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோவியோ மொபைல் என்ற சிறிய நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விளையாட்டின் மகத்தான வெற்றியை அவர் களே எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் 2010-ல் வாங்கப்பட்ட #1 மொபைல் விளையாட்டு இதுதான் என்று ஆப்பிள் வலைதளம் சொல்வதால், இதைப் படிக்கும் சிலராவது, கோபக்காரத் தற்கொலைப் படையைப் பன்றிகளைக் கொல்லப் பயன்படுத்தி இருப்பீர்கள் என்பது எனது யூகம். கோபக்காரப் பறவைகளின் விக்கி உரலி - http://en.wikipedia.org/wiki/Angry_Birds
சார்லி என் விரலைக் கடிச்சுட்டான்: இங்கிலாந்தில் வசிக்கும் டேவிஸ்-கார் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அண்ணன் ஹாரி. தம்பி சார்லி. ஹாரி பாசமாகத் தனது மடியில் சார்லியை அமர்த்திக்கொண்டு தனது விரலை சார்லியின் வாயில்வைக்க, அவன் கடமையே கண்ணாக அதைக் கடிக்க, முதலில் வாய் நிறையப் புன்னகையுடன் இருந்த ஹாரியின் கண்களில் முதலில் லேசாகக் கலவரம், தொடர்ந்து வீறிட்டுக் கதறல் - 'சார்லி, என் விரலைக் கடிச்சுட்டான். ஓ சார்லி... அது ரொம்ப வலிக்குது’ என்று ஹாரி சொல்வதாக முடியும் இந்த வீடியோ, 56 விநாடிகள் ஓடுகின்றன. யு டியூபில் தரவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, இந்தக் கட்டுரை எழுதப்படும் வேளையில், 276 மில்லியன் தடவை பார்க்கப் பட்டு இருக்கிறது. சமூக ஊடகங்களின் அதிகரித்தபடி இருக்கும் தாக்கத்தை வைரல் விளைவுக்குப் (viral effect) பயன்படுத்திக்கொள்ள மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பலமாகப் போட்டியிடுகின்றன. இதற்கு எழுத்துத் தகவல் களைவிட, வீடியோ எளிதாக உதவும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உதாரணத்துக்கு, இந்த வீடியோவைப் பகடி செய்தும், ஆராய்ச்சி / அலசல் செய்யும் பல நூறு வீடியோக்களின் நோக்கம், அந்த வீடியோக் களும் இதன் அளவுக்குப் பார்க்கப்படாதா என்ற ஆசைதான். பை தி வே, வீடியோவைக் காண http://www.youtube.com/watch?v=_OBlgSz8sSM என்ற உரலியைச் சொடுக்குங்கள்.
சரி, இணைய உலகில் இந்த வாரம் என்ன விசேஷம்? We are a Nation of Google and Facebook என்றது அதிபர் ஒபாமா பேச்சின் முக்கிய ஹைலைட். சமூக ஊடகங்களைத் திறமாகத் தனது தேர்தல் களத்தில் பயன்படுத்தியவர் ஒபாமா என்பதும், அடுத்த வருடம் மீண்டும் அவர் தேர்தலில் நின்றாக வேண்டும் என்பதும் அத்தனை முக்கியம் இல்லாத கொசுறுத் தகவல்கள்.
இது இப்படியிருக்க, எனது ஃபேஸ்புக் சுவரில் 'அண்டன், ஃபேஸ்புக் தளத்தையே மூடப்
![](http://new.vikatan.com/av/2011/02/16/images/p84.jpg)
போகிறார்களாம். அதில் உறுப்பினர்கள் சேரும் எண்ணிக்கையைத் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம். எனவே, போட்டோக்கள் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். இது மார்ச் 15-ம் தேதி நடக்கப்போகிறது!’ என்று நாஸ்டர்டாமஸ் நாடி ஜோசியர் ஸ்டைலில் ஹேரிஸ் ராகுல் எழுதிவைத்த தைப் படித்ததும், 'நல்ல காமெடி’ என்று தோன்றியது. ஆனால், எங்கோ, யாரோ ஆரம் பித்த இந்த வதந்தியை உண்மை என நம்பி, இந்திய டி.வி சேனல்களில் இது அலசப்பட்டது பின்னர்தான் தெரிய வந்தது. நீங்கள் பயன் படுத்துகிறீர்களோ இல்லையோ, உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, கிட்டத்தட்ட 600 மில்லியன் பயனீட்டாளர்களைக்கொண்ட ஃபேஸ்புக், இன்றைய நாளில் இணையத்தில் அசைக்க முடியாத சக்தி.
குறைந்தபட்சம் அடுத்த 10 வருடங்களுக் காவது இது தொடர்ந்து வளரும்; வாழும் என்பது எனது கணிப்பு. ஃபேஸ்புக்கின் முக்கியத்துவத்துக்குச் சமீபத்திய உதாரணம் - எகிப்து! தங்களுக்கு எதிராக அணி திரள் கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அரசாங்கத்தின் முதல் முடிவு - ஃபேஸ்புக்கை எகிப்துக்குள் இயக்க முடியாமல் செய்தது!
!