சிலருக்கு நெஞ்சு எரிவது போல இருக்கும். சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எதிர் ஏப்பம் போல வாய்க்கு கொண்டு வரப்படுவது போல இருக்கும். ஆனால் வாந்தியும் வராது. இதை நிலையை எதிர்கழித்தல் என்று சொல்வர். இந்த இரண்டு குறைபாடுகளுக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா? உங்களின் உடல் எடைதான்.
அதிகமான எடைதான் மேற்கண்ட இரண்டு குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. நெஞ்செரிச்சல், மற்றும் எதிர்கழித்தல் தொடர்பாக மிகப்பெரிய ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உடல் எடை அதிகரிக்கும் போது நெஞ்செரிச்சலும், எதிர்கழித்தலும் கூடவே அதிகரித்ததை காண முடிந்தது. அதிலும் ஆண்களை விட பெண்கள் கூடுதலாக அவதிப்படுகிறார்கள்.
பெண்களின் இந்த அவதிக்கு ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்தான் காரணம். மெனோபாசுக்கு முன்பு வரை சராசரியான எடையுடன் இருக்கும் பெண்கள் அந்த கால கட்டத்துக்குப் பிறகு குண்டாகி விடுகிறார்கள். அப்போது நெஞ்செரிச்சல், எதிர்கழித்தல் உருவாகின்றன.
ஆக, நெஞ்செரிச்சல் மற்றும் எதிர்கழித்தலை குறைப்பதற்கு என்ன வழி? என்று யோசிக்கவே வேண்டாம். உங்கள் எடையை குறைத்தால் போதும். எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு வேண்டும். அவஸ்தைகள் தானாகவே குறையும்.