![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/deardr2.gif)
? எம்.ராஜேஷ்வரி, மதுரை6
''21 வயதுக்கு நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு வெயிட் போடுவதில்லை. என் ஃப்ரெண்ட்ஸ் 'எலும்பு வளர்ச்சிக் குறைபாடுதான் காரணம்' என்கிறார்கள். அதனால் அதிக அளவில் கால்சியம் சத்துள்ள மாத்திரைகள் மற்றும் உணவு வகைகள் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பதற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் சம்பந்தம் உள்ளதா?''
டாக்டர் எஸ்.ஆறுமுகம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்:
![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/deardr1.jpg)
அந்தச் சமயத்தில் சாதாரணமான உணவில் இருந்து பெறப்படும் கால்சியம் எலும்பு வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது. அதனால் கூடுதலாகக் கொஞ்சம் கால்சியம் எடுத்துக்கொள்வது நல்லது.
ஆனால், கால்சியம் அளவு குறைவாக இருப்பதால் உங்கள் உடல் எடை குறையாது. அதிகபட்சமாக எலும்புகள் கொஞ்சம் பலவீனமடையும்.
எடை கூடுவதற்கு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஒல்லியான உடல் அமைவது வரப்பிரசாதம் என்பார்கள். அதனால் இயல்புக்கு மீறிய பருமன் அடைந்து அவதிப்படாதீர்கள்!''