• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 23, 2011

    உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்ய வேண்டியவைகள்

    உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும், உடற் பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டியவைகள்:
    1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
    2. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
    3. காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.
    4. பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    5. இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.
    6. படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
    7. இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
    8. தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
    9. முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
    10. பாஸ்ட்புட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.