![]() ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா? இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருளில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கென்று இருக்கும் ஒரு மேம்பட்ட மென்பொருள் தான் Universal Viewer. இதன் மூலம் எல்லா வகையான மல்டிமீடியா மற்றும் ஆவணங்களை ஒரே மென்பொருளில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பெரும்பாலான கோப்பு வகைகளை பார்க்கும் படி ஆதரிக்கிறது. இதன் மூலம் பார்க்கக்கூடிய கோப்புகளும், அதன் வகைகளும்: 1. Text Files - txt, binary, hex, unicode, Rtf, Utf-8. 2. Image files - bmp, jpg, tiff, png, gif and etc. 3. Internet files - html, xml, pdf. 4. Multimedia files - avi, mpg, mp3, wmv and etc. 5. MS Office files - doc, docx, xls, ppt. இத்தனை வகையான கோப்புகளையும் ஒரே மென்பொருளில் பார்ப்பதனால் நேரம் செலவிடுவதும் குறையும். வேறு மென்பொருள்களை தேடி அலையவும் தேவையில்லை. இந்த மென்பொருளை Right click மெனுவில் வரும்படி வைத்துக் கொண்டால் பலவகையான கோப்புகளை எளிதாக விரைவாக திறந்து படிக்கலாம். பயன்படுத்த எளிமையான இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது. தரவிறக்க சுட்டி |