• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Saturday, March 26, 2011

    நாம் பயன்படுத்திய இணைய இணைப்பின் அளவை அளவிட

    இணைய இணைப்பை பலரும் பயன்படுத்தி வருகின்றோம். ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்படுத்தினோம் என பயந்து கொண்டே இருக்கின்றோம்.இந்த மென்பொருள் அந்த குறையை முற்றிலும் நீக்கி விடுகின்றது. இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் உங்கள் கணணியின் நேரத்திற்கு அருகில் சின்ன கணணி ஐகான் தோன்றும். இதை ரைட் கிளிக் செய்யவும்.
    இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்யவும். இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள். இருக்கும். அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய திகதியை நிரப்பி கொள்ளவும்.
    அடுத்துள்ள கட்டத்தில் Dont track between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை அமைத்துக் கொள்ளவும். அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்யவும். இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு அளவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
    அளவுகளை எம்.பி அல்லது ஜி.பி யில் பார்த்துக் கொள்ளலாம். அதே போல் நீங்கள் இந்த ஐகான் மீது வைத்து லெப்ட்கிளிக் செய்தால் அப்போதைய அளவு, இன்றைய அளவு மற்றும் அந்த மாதத்திய அளவினை எளிதில் பார்த்துக் கொள்ளலாம்.
    உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள் வரும். எனவே செட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
    தரவிறக்க சுட்டி