தேவையற்ற தகவல்களை திணிக்கும் ஸ்பாம் இ-மெயில் பாட்னெட் வலையமைப்பை மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் வீழ்த்தியது.அமெரிக்க அரசு நிர்வாகத்தின் கூட்டு நடவடிக்கை மூலம் ஸ்பாம் பிரச்சனைக்கு உலகின் பெரும் மென்பொருள் நிறுவனம் முடிவு கண்டது.
ருஸ்டாக் பாட்னெட் அல்லது கம்ப்;யூட்டர் நிகழ்வு பாதிப்பு வலை அமைப்பு ஸ்பாம் இ-மெயில் அனுப்பி கம்பம்யூட்டர் பயன்பாட்டாளிகளின் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
வியாழக்கிழமையன்று இந்த வலையமைப்பை மைக்ரோசாப்ட முடக்கியது. இதனைத் தொடர்ந்து ருஸ்டாக் வலையமைப்பில் இருந்து ஸ்பாம் இ-மெயில்கள் வருவது குறைந்தது.
இந்த ஸ்பாம் மெயில்கள் வருவது 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனை முற்றிலும் தடுப்பதற்கு இன்னும் நீண்ட கால நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
பாட்னெட் ஆபரேட்டர்கள் மீது மைக்ரோசாப்;ட் நிறுவனம் சியாட்டில் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் நீதிமன்றம் அளித்த முடிவைத் தொடர்ந்து யு.எஸ். மார்ஷல்ஸ் சேவையுடன் மைக்ரோசாப்ட் இணைந்து டென்வர், டல்லாஸ், சிகாகோ, சியாட்டிஸ், கொலம்பஸ் உள்ளிட்ட 7 நகரங்களும் பாட்னெட் வலையமைப்பில் நடவடிக்கை எடுத்தது. பாட்னெட்டை கட்டுப்படுத்தும் ஐ.பி. முகவரிகளை மைக்ரோசாப்ட் வெட்டியதுடன், தகவல்களையும் நிறுத்தியது. |