இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் நிதித் துறை சீர்திருத்தங்களை துவக்க காலத்திலேயே உள் வாங்கி, நவீன மய சேவைகளுக்கும்,
சிறந்தவாடிக்கையாளர் சேவைக்கும் பெயர் பெற்ற கார்ப்பரேஷன் வங்கியில் 250 புரொபேஷனரி அதிகாரிகளை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.என்ன தேவை: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 31.01.2011 அன்று 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உள்ள சலுகைகள் பற்றிய விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் கார்பொரேஷன் வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு கார்ப்பரேஷன் வங்கிக் கிளைக்கு சென்று A/C No : 0377/CA/01/29 என்ற அக்கவுன்ட் எண்ணில் செலுத்தவும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்-லைன் முறையில் மட்டுமே கார்ப்பரேஷன் வங்கியின் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கும் முன் கட்டணத்தை செலுத்தி விட்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். முக்கிய விபரங்கள் அனைத்தும் உங்கள் இ-மெயில் முகவரி வழியாகவே தரப்படும் என்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள ஒரு பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை முதலில் உறுதி செய்யவும்.
முக்கிய தேதிகள்: ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 08.04.2011
பதிவு செய்த பின் மாற்றங்கள் செய்ய இறுதி நாள் : 10.04.2011
எழுத்துத் தேர்வு அனுமதி சான்று தருவது துவங்கும் நாள் : 13.05.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 29.05.2011
இணைய தள முகவரி : "www.corpbank.com"