• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 23, 2011

    மூளைச் செல் பாதிப்பால் நினைவுத் தடுமாற்றம் வரும்

    மூளைச் செல்லில் உள்ள ஒரு புரதம் பாதித்தால் "ஆட்டிசம்" எனப்படும் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது.ஏனென்றால் இந்த புரதமானது தீவிரமான தகவல் தொடர்பினை கட்டுப்படுத்துகிறது. ஷேங் 3 என்ற புரதத்தை கட்டுப்படுத்தும் மரபணுவை விஞ்ஞானிகள் மாற்றம் செய்தனர். அப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சுண்டெலிகள் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தின.
    ஒரே விதமான செயல்களை செய்தன. அவற்றின் நடவடிக்கையில் நினைவுத் தடுமாற்றம் காணப்பட்டது. அப்போது ஷேங் புரதம் ஆட்டிசம் எனப்படும் நினைவுத் தடுமாற்றத்திற்கு காரணமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
    இந்த ஆய்வு ஆட்டிசம் பிரச்சனைக்கு தீர்வு காணும் புதிய மருத்துவ சிகிச்சைக்கு வழிவகுப்பதாக உள்ளது. ஆட்டிசம் சிறு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் காணப்படுகிறது. ஷேங் 3 புரதம் சினாப்சஸ் பகுதியில் உள்ளது.
    இது நரம்பு செல்கள் சந்திக்கும் இணைப்பாக உள்ளது. இந்த சினாப்சஸ் பகுதி மூளைச் செல்கள் ஒன்றையொன்று தகவல் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
    ஆட்டிசம் பிரச்சனைக்கு ஷேங் 3 புரதம் காரணமாக இருப்பதை வடக்கு கரோலினாவில் ட்யூக் பல்கலைகழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.