சிறந்த முறையில் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகள் புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஐந்து, ஏழு,11 மற்றும் 14 ஆகிய வயதுகளில் சிறந்து காணப்படுகின்றனர். தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை நன்கு அதிகரிக்கக் கூடியது என்பது நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு விடயமாகும்.
கேட்டல் சம்பந்தமான கோளாறுகள், வயிற்றில் பிரச்சினை, ஆஸ்துமா என்பனவற்றுக்கும் சிறந்த நிவாரணியாக தாய்ப்பால் நீண்டகாலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தாய்ப்பால் பிள்ளைகளின் புத்திகூர்மைக்கும் சிறந்தது என்பது பற்றிய ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.
தற்போது இதுவும் விஞ்ஞான ரீதியாக நிரூபணமாகியுள்ளது. தாய்ப்பால் சிறந்த சுகாதார நன்மைகளை வழங்கக் கூடியது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.
தற்போது அது மூளை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த துணையாக உள்ளமை தெரியவந்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |