- சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை, புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை திகைக்க வைக்கிறது.
30, 40 ஆண்டுகளுக்கு முன்பு... ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதெல்லாம் 'பணக்கார நோய்கள்'. ஆனால், கால மாற்றத்தில்... ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் கடந்து, எல்லோரையும் அவை வருத்திக் கொண்டிருக்கின்றன சமீப வருடங்களாக. அதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக, இப்போது டீன் ஏஜ் மற்றும் சிறுவயது குழந்தைகளையும் அந்த நோய்கள் ஆட்டிப் படைக்க ஆரம்பித்திருப்பது... கொடுமையிலும் கொடுமை!
|
![](http://new.vikatan.com/doctor/2011/03/18/images/avl94.jpg)
பொதுவாக, 'பிறக்கும்போது குழந்தை 2.5 - 3 கிலோ எடையுடன் இருப்பதுதான் ஆரோக்கியம். ஆனால், அதற்கு மேலும் கூடுதல் எடையுடன் பிறந்தால்தான் ஆரோக்கியம்' என்று தவறாகப் புரிந்துகொண்டு, பல கர்ப்பிணிகள் அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இது தவறான அணுகுமுறை. அங்கிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது பிரச்னை'' என்ற தீபா, குழந்தைகளுக்கு கடைப்பிடிக்க வேண்டிய எளிய உணவு வழிமுறைகளையும் சொன்னார்.
"பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தை ‘கொழுகொழு'வென வளர வேண்டும் என்ற அதீத அக்கறையில், இரண்டு வயதிலேயே சத்து பானங்கள் கொடுப்பதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். ஒன்றரை வயதுக்கு மேல் குழந்தை யைத் தானாகவே சாப்பிடப் பழக்க வேண்டும். வீடெல்லாம் சாப்பாட்டை இறைக்கும், வேலை வைக்கும் என அந்தப் பழக்கத்தை கற்றுத்தர மறுப்பது தவறு. ஏனெனில், அப்போதுதான் தனக்குத் தேவையான உணவின் அளவை அது உணரும். நாமாக வைத்துத் திணித்தால், அது விழுங்கிக் கொண்டேதான் இருக்கும். மூன்று வயதுக்குள் கீரை, காய்கறிகள் போன்ற சத்துணவுகள் அனைத்தையும் சாப்பிடப் பழக்கிவிட வேண்டும்'' என்றவர், கூடாத உணவுகளையும் பட்டியலிட்டார்.
![](http://new.vikatan.com/doctor/2011/03/18/images/avl94a.jpg)
எண்ணெயில் பொரித்த உணவு, சமோசா, சாட் வகை உணவுகள், கூல் டிரிங்ஸ், பீட்ஸா, பர்கர், கேக், சாக்லேட் போன்றவற்றை ஆசைக்கு ஒருமுறை கொடுக்கலாம். அதையே ‘ரெகுலர் ஸ்நாக்ஸ்' என்று பழக்கினால்... உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் விரைவிலேயே வரத்தான் செய்யும். பள்ளிப் பருவத்தில் இப்படிச் சாப்பிட்டு பழகும் குழந்தைகள், டீன் ஏஜிலும் ‘ஃபேஷன்' என்று அதையே தொடர்வதால்தான் இன்று பல டீன் ஏஜ்களுக்கு ஒபிஸிட்டி, அது சார்ந்து வரும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், படிப்பில் கவனமின்மை போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
தொடர்ந்தவர், "இன்றைய குழந்தைகள் காலையில் ஏழரை, எட்டு மணிக்கே பள்ளிக்குச் செல்ல நேர்வதால், காலையில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. பசி தாங்க முடியாமல் நொறுக்குத் தீனியை அதிகம் சாப்பிடுவார்கள் இதுதான் ஒபிஸிட்டிக்கு மூலகாரணம்! சாப்பிடாமல் செல்வதால், படிப்பிலும் கவனம் செலுத்த முடியாது; சுறுசுறுப்பும் இருக்காது. குழந்தைகளை இரவில் சீக்கிரம் படுக்க வைத்து சரியான நேரத்தில் எழுப்பி விடுவதும், பல நோய்களுக்குத் ‘தடா' போடும். குழந்தைகளை எப்போதும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்'' என்றவர்,
"எப்போதும் டி.வி., வீடியோ கேம், ப்ளேஸ்டேஷன் முன்பு உட்கார்ந்து கொண்டே இருக்கும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னைகள் அதிகம் வருகின்றன. ஒவ்வொரு குழந்தையும் கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஓடியாடி விளையாட வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி மனதையும் கட்டுப்படுத்துவதால் இது அவசியமானது என்று பெற்றோர்கள் உணர்ந்து, பிள்ளைகளுக்கும் புரியவைக்க வேண்டும். எப்போதும் படிப்பு, படிப்பு, படிப்பு என்று அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும் குழந்தைகள், கண்டிப்பாக அவர்களுக்குப் பிடித்த வெளி விளையாட்டுகளை விளையாடுவதுதான் அந்த அழுத்தத் திலிருந்து அவர்களை மீட்டு ஆரோக்கியமாக இருக்க உதவும்!'' என்று பெற்றோர்களுக்கான படமாகச் சொன்னார் தீபா.
குழந்தை செல்லம், வீட்டுக்கும் நாட்டுக்கும் பெரும் செல்வம். அதன் ஆரோக்கியத்தில்தான் நம் நிம்மதியும் தேசத்தின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பதால்... பெற்றோர்கள் கவனமாக இருப்போமே!