• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 24, 2011

    Folder Visualizer: வன்தட்டில் உள்ள கோப்பறைகளின் விவரத்தை அறிய

    கணணியின் முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது.நம்முடைய கணணியில் ஓப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே வன்தட்டினை தனித்தனி தொகுதிகளாக(Partition) பிரித்து பயன்படுத்தி வருவோம். ஒவ்வொரு தொகுதியும் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவத்தை மட்டுமே நாம் ஓப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் காண முடியும்.
    மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கோப்புகள் எவை எவை எந்த அளவு நினைவகத்தை பகிர்ந்து உள்ளது போன்ற விரங்களை காண வேண்டுமெனில் தனித்தனியாக சென்று ஒவ்வொரு கோப்பறைகளின் நினைவத்தை காண வேண்டும்.
    அவ்வாறு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தவாறே மொத்த வன்தட்டினுடைய கோப்பறைகளின் மொத்த மதிப்பை காண ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் FolderVisualizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
    அதில் தோன்றும் விண்டோவில் எந்த தொகுதியை பற்றி விவரம் அறிய வேண்டுமோ அதனை டிக் செய்துவிட்டு Scan Now பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்.
    இந்த மென்பொருளை பயன்படுத்தி வன்தட்டை ஸ்கேன் செய்து முழுமையான விவரத்தை அறிந்து கொள்ள முடியும். உங்கள் விருப்பபடி விவரங்கள் அனைத்தும் தனித்தனி பகுதியாக பிரித்து காட்டப்படுகிறது.
    இந்த மென்பொருளின் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளது. தொகுதியினுடைய முழுவிவரமும் தனி வரை படமாக காண முடியும். மேலும் ப்ளாஷ் ட்ரைவ்களையும் ஸ்கேன் செய்து அதை பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய முதல் 100 பைல்களை தனியே காண முடியும்.
    இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவும் போது மின்னஞ்சல் முகவரி மற்றும் பயனர் பெயரை உள்ளிட கோரும். நீங்கள் உள்ளிட்டு ஒகே செய்தவுடன் கீயானது உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மென்பொருனானது விண்டோஸ் எக்ஸ்பி,விஸ்டா மற்றும் 7 ஆகிய இயங்குதங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.
    தரவிறக்க சுட்டி