வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்!
ஆரம்பத்தில் தைலம் தடவுவது, வெந்நீர் ஒத்தடம் ஆகியவையே மூட்டு வலிக்கான சிகிச்சையாக இருந்தது. மருத்துவ வளர்ச்சியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. காரணம், அறுவை சிகிச்சை செய்தாலும், அதன் பயன் 10 முதல் 15 ஆண்டுகள்தான். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஆனால் இன்று, காலாகாலத்துக்கும் சிக்கல் இல்லாத தீர்வாக புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது.
முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.
![](http://new.vikatan.com/jv/2011/02/27/images/p24a.jpg)
சதவிகிதம் பேருக்கு மூட்டுவலி ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. முன்பெல்லாம் இந்தப் பிரச்னை 40 - 50 வயதினரையே அதிகம் பாதிக்கும். ஆனால், இப்போது இளம் வயதினரும் மூட்டு வலியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம் மூலமாக, சென்னையில் அறுவை சிகிச்சை செய்துவரும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் நந்தகுமாரிடம் பேசினோம். ''மூட்டு வலிக்கு முக்கியக் காரணம் எலும்பில் ஏற்படும் தேய்மானம்தான். மூட்டு எலும்பு இணைப்பைச் சுற்றி உள்ள ஜவ்வு முற்றிலும் தேய்ந்த பிறகு, அந்தக் கிண்ணம் போன்ற அமைப்பில் இருந்து எலும்பு வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், மாடிப்படிகளில் ஏறினாலோ, உட்கார்ந்து எழுந்தாலோ, வலி அதிகமாக இருக்கும்.
பொதுவாக கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், கட்டுப் போடுகிறோம், அதனால் அசைவு
![](http://new.vikatan.com/jv/2011/02/27/images/p24.jpg)
இப்போதைய நவீன தொழில்நுட்பத்தின்படி, மெட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இதற்காக ஆக்ஸீனியம் என்ற மெட்டலைப் பயன்படுத்துகிறோம். ஜவ்வுக்கு பதிலாக ஹெடென்சிட்டி பாலி எத்தலின் பயன்படுத்துகிறோம். சிலருக்கு மெட்டல் அலர்ஜி
![](http://new.vikatan.com/jv/2011/02/27/images/p25.jpg)
இந்த மெட்டலைப் பயன்படுத்தும்போது, அதன் மேல் ஒரு கோட்டிங் ஏற்படுகிறது. அது மூட்டு அசையும்போது, ஹைடென்சிட்டி பாலி எத்தலின் மீது உராய்வுகளை ஏற்படுத்துவது இல்லை. உராய்வு ஏற்படவில்லை, உடையவில்லை என்றால், அந்த மூட்டின் ஆயுள் அதிகரிக்கிறது. அதாவது 40 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள் வரையிலும்கூட தாக்குப்பிடிக்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறுவைசிகிச்சை முறை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, சில மாதங்களுக்கு உள்ளாகவே தமிழகத்தில் அறிமுகப்படுத்தி விட்டோம். இப்போது மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு குறைந்தது 40 ஆண்டுகளுக்குப் பிரச்னை இருக்காது.
பழைய சிகிச்சை முறையில், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்பவர்கள் மூன்று வாரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதன் பிறகு பிசியோதெரப்பி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், புதிய சிகிச்சை முறையில், அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே நடக்க முடியும், ஐந்தாவது நாளில் வீட்டுக்குச் செல்லலாம். புதிய தொழில்நுட்பத்தில், எலும்பையும் மெட்டலையும் இணைக்க எலும்பு சிமென்ட் தேவை இல்லை. இந்தப் புதிய முறையால், எலும்புக்கும் மெட்டலுக்கும் இடையிலான இணைப்பு இளக வாய்ப்பு இல்லை. பழைய சிகிச்சைக்கும், புதிய சிகிச்சைக்கும் கட்டணமும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை!'' என்கிறார் நம்பிக்கை வார்க்கும் விதமாக!
![](http://new.vikatan.com/jv/2011/02/27/images/p25b.jpg)