• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 24, 2011

    சுற்றுச்சூழல் பாதிப்பே நீரிழிவு நோய்க்கு காரணம்

    வாகன புகை, தூசு போன்ற மாசு நிறைந்த சூழலில் வாழும் குழந்தைகள் வளர்ந்ததும் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். குண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.சுற்றுச்சூழல் சீர்கேடு, தூசு, புகை ஆகியவற்றுக்கு இடையே வசிக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் ஓகியோ பல்கலைகழகம் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது.
    அதன் முடிவுகளை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது: மனித உடலுடன் நெருங்கிய தொடர்புடைய எலியின் குட்டிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடந்தது. மாசு, வாகன புகை நிறைந்த பகுதிகளில் வாழும் எலிகள் மற்றும் தூய்மையான மாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டன.
    மாசு நிறைந்த பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த சோதனையில் உடலில் இன்சுலின் அளவு வேகமாக குறைவது தெரியவந்தது. அதனால் டைப் 2 வகை நீரிழிவு நோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த எலிகள் அதிக எடையுடன் இருந்தது தெரியவந்தது.
    இயற்கையான மாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கும் இன்சுலின் தடுப்பு சக்தி அதிகரிப்பதையும், உடல் எடையை சீராக பராமரிப்பதையும் அறிய முடிந்தது. இரண்டு எலி குழுக்களையும் சோதனை கூடத்தில் இதே முறையில் பராமரித்த போது இது உறுதியானது.
    எனவே அதிக சுகாதாரமற்ற வாகன புகை நிறைந்த பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் வளர்ந்ததும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும், கூடுதல் எடை போடும் அபாயமும் உள்ளது என ஆய்வில் தெரியவந்தது. இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.