• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    எடையை குறைக்க 5 நேர சாப்பாடு

    டாக்டர் மாதவி குணசீலா – பெங்களூரில் பிரபலமான மருத்துவர். உடல் பருமனை குறைப்பதில் இவர் முன்னோடி. இவருடைய அம்மா டாக்டர் சுலோச்சனா குணசீலா, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கி பெருமைபெற்றவர்.
    டாக்டர் மாதவிக்கு அம்ஸு, மான்யா என இரு மகள்கள்.

    “சின்ன வயதில் எனக்கு கற்பனையான விஷயங்களில்தான் அதிக ஆர்வம் இருந்தது. மாத்திரை, மருந்துகளை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. ஆனாலும் விதி… நானும் மருத்துவத் துறையில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் எடுத்து விட்டேன்”-என்று அமைதியாக புன்னகை செய்கிறார் மாதவி.
    “முதுகு வலி, விளையாடும்போது காயம் ஏற்படுதல் போன்றவைகளின் தீவிரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை உடனே அவர்கள் உணர்ந்து கொள்ளாததால், பல நாட்கள் கழித்தே டாக்டரிடம் வருகின்றனர். அவர்கள் அடிபட்ட உடனே சிகிச்சை பெற்றுக்கொள்வது மிக நல்லது”-என்கிறார்.
    இவர் அமெரிக்காவில் பல்வேறு வகையான மருத்துவமுறைகளை கற்றிருக்கிறார்.
    “மருத்துவ துறையில் எனக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். துப்பாக்கியால் சுடப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் என்னிடம்தான் சிகிச்சைக்கு வருவார்கள். அதேபோல் போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களும், விலைமாதாக இருப்பவர்களும், பணம் செலவாகுமே என்று நினைத்து முதலிலே சிகிச்சையை நாடுவதில்லை. இது பின்னால் பெரிய ஆபத்தை விளைவிக்கும்” என்று கூறுகிறார், மாதவி. இவருடைய கணவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர்.
    “இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆதனால்தான் பெண்களில் குண்டானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு இன்றைய வாழ்க்கை முறை முக்கிய காரணம். முதலில் பெண்கள் அனைவருமே உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லவேண்டும்.
    தினமும் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சரியான எடையில், ஆரோக்கியமான உடலை பெற முடியும். சில பெண்கள் ஒல்லியாக தோன்றுவதற்காக உணவின் அளவை வெகுவாக குறைக்கின்றனர். இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டு, இறுதியில் ஆபத்தாக போய்விடும்.
    மகள்களுடன்இந்தியாவில் மட்டுமல்ல… உலகளவில் உடல் பருமன் என்பது அனைவரையும் பயமுறுத்தி வருகிறது. இதனால் பலவித நோய்கள் உருவாகின்றன. பிள்ளைகள் குண்டாகும் போது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அது தவறு. குண்டாகும் பிள்ளைகளை தினமும் அதிக நேரம் விளையாட விட வேண்டும். பள்ளியிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். டிவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். அதிக கொழுப்பு உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகமாகும். நீரிழிவு, அதிக கொழுப்பு சேருதல், ஸ்ட்ரோக், கல் அடைப்பு, தூக்கமின்மை, கேன்சர் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.
    பெரும்பாலான பெண்கள் 30 வயதை கடக்கும்போதுதான் பருமனாக மாறுகிறார்கள். இவர்கள் அருகிலிருக்கும் ஜிம்முக்கு போகலாம். ஜிம்முக்கு போக விரும்பாதவர்கள் அருகில் இருக்கும் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களில் நீண்ட நேரம் நடக்க வேண்டும். பருமனாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எண்ணை உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிப்ஸ், பேல் பூரி, சமோசா, மசாலா தோசை போன்றவற்றை தொடவே வேண்டாம்.
    சிறந்த நிïட்ரிஷியனின் வழிகாட்டுதல் மூலம் சரியான உணவு முறையை கடைபிடித்தால் எளிதாக எடையை குறைத்து விடலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ணும் உணவின் அளவை அதிகரிக்காமல், அதையே ஐந்து நேரம் உணவாக உட்கொள்ளவேண்டும். இடையில் ஸ்நாக்ஸ் அயிட்டங்களை தொடக்கூடாது. நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழச்சாறு மற்றும் ஓட்ஸ் பிஸ்கெட்களை சாப்பிடலாம். ஆப்பிள் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் நல்லது. ஸநாக்ஸ், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் கேக் வகைகளை வாரத்துக்கு ஒருமுறை மட்டும் அளவோடு சாப்பிடலாம். இப்படி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என வழக்கமாக்கிக் கொண்டால் உடல் பருமனை எளிதாக குறைக்கலாம்” என்கிறார், டாக்டர் மாதவி.