• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    அடிக்கடி சாக்லேட்… வேண்டாமே!

    சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    ஏதாவது ஒரு வேலையில் இருக்கும்போது தூக்கம் எட்டிப்பார்த்தால் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் உள்ள கபீன் என்ற ரசாயனப்பொருள் நம் மூளையின் செயல்பாட்டை தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.
    இதே கபீன் சாக்லெட்டிலும் உள்ளது. சாதாரண சாக்லெட்டில் 9 மில்லி கிராம் வரை கபீன் இருக்கிறதாம். சில உயர் ரக சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் 30 மில்லிகிராம் வரையில் கபீன் இருக்கிறதாம். இது தூக்கத்தை விரட்டி விடும்.