• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, February 22, 2011

    எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த

    நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும் இருக்கும்.இதற்காக Photoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் சில நிமிடங்களில் புகைப்படங்களை அழகாக Cut செய்யலாம். வேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு பெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை.
    புகைப்படங்களை சிலர் போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை அழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும் வைக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
    இந்தத்தளத்திற்கு சென்று Choose என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் Cut செய்ய வேண்டிய புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தில் எந்த பகுதிவரை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
    அடுத்து Round the Corners என்பதில் எந்த Style-ல் cut செய்ய வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிழல் வேண்டும் என்றால் Drop Shadow என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக்கொண்டு Preview என்ற பொத்தானை அழுத்தி Output படத்தின் Preview பார்த்துக்கொள்ளலாம்.
    எல்லாம் சரியாக தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்ததும் Done என்ற பொத்தானை சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.
    இணையதள முகவரி