• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    ஜிமெயில் கணக்கில் உங்களது பேஸ்புக்கை கொண்டு வர

    பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும்.
    நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயிலையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும். ஆனால் பேஸ்புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணைத்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.
    இதனால் ஜிமெயிலில் இருந்தே நண்பர்களின் பதிவிற்கு கருத்துரைகள் இடலாம். நம் விருப்பங்களையும் தெரிவிக்கலாம்.
    இந்த வசதிகளை உங்கள் ஜிமெயில் கணக்கிலும் கொண்டு வர முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
    பின்னர் Settings - Labs க்ளிக் செய்யவும் உங்களுக்கு வரும் விண்டோவில் Enabled Labs பகுதியில் Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    மேலே செய்த மாற்றத்தை சேமித்தவுடன் அடுத்து Gadget டேபை க்ளிக் செய்யவும். அங்கு வந்திருக்கும் விண்டோவில் கீழே உள்ள URL காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
    http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml பேஸ்ட் செய்தவுடன் அதற்கு அருகே உள்ள Add என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும் பேஸ்புக் உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்ந்துவிடும்.
    இப்பொழுது நீங்கள் ஜிமெயிலை Refresh செய்யுங்கள். இப்பொழுது ஜிமெயிலின் Chat பகுதிக்கு கீழே பாருங்கள் பேஸ்புக் விட்ஜெட் சேர்ந்து இருக்கும். அதில் உள்ள Expand என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் அதில் Allow என்பதை கொடுத்து விட்டு பின்பு உங்கள் பேஸ்புக் ID, Password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் பேஸ்புக் கணக்கை ஜிமெயிலிலே திறந்து பார்க்கலாம்.