அதிக அளவு கொலஸ்ட்ரால் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கு காரணம் அல்ல என டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஆண்களிடம் கொலஸ்ட்ரால் இருந்தாலும் சராசரி அளவிற்கும் இரண்டு பங்காக கொலஸ்ட்ரால் இருந்தாலே அது சாத்தியமாகும். ஒவ்வொரு ஆண்டும் 150,000 பேர் பிரிட்டனில் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
அவை பெரும்பாலும் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவை குறைக்கும் சிறு அடைப்பினால் உருவாகும் மாரடைப்புகள் தான். 13,957 நபர்களிடம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. 33 ஆண்டு கால ஆய்வில் 837 ஆண்களும், பெண்களும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மேற்கண்ட ஆய்வுகள் எல்லாவற்றின் முடிவிலும் காணப்பட்ட உண்மை பெண்களுக்கு வரும் மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் காரணம் அல்ல. ஆண்களுக்கு உண்டாகும் மாரடைப்புக்கு அதிகப்படியான கொலஸ்ட்ராலே காரணம் என்பதாகும். மேலும் ட்ரிக்ளிசெனரட்ஸ் அளவை தொடர்ந்து அளவிடுவது மாரடைப்பை குறைப்பதற்கான வழி என்பதாகும். |