லாக்டு இன் சின்ட்ரோம் என்ற நோய் மூளையில் ஏற்படும் ட்ரோமேடிக் தாக்கத்தால் ஏற்படுகிறது. இதனால் கடுமையான இதயவலியும் உண்டாகிறது.நோய் பாதித்தவர்கள் சுயநினைவோடும், சிந்திக்கக் கூடியவர்களாகவும், பகுத்தறியும் உணர்வுகளோடும் இருந்தாலும் திடீரென நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இயக்கமில்லா நிலையை அடைகின்றனர். தன் உடம்புக்குள்ளேயே தன்னைப் பூட்டிக் கொண்டது போன்ற நிலையை அடைவார்கள்.
பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் இந்த நோய் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடனும், தங்களிடம் இருக்கும் நிலையை அனுசரித்து செல்பவர்களாகவும் இருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
இயக்கமற்ற நிலையை அடையும் போது கண்களை சிமிட்டுவதாலோ, கண்களை அசைப்பதாலோ, பேசுவதாலோ, மற்ற உடல் ரீதியிலான அசைவுகளாலோ பழைய நிலையை அடைகின்றனர். இந்த ஆய்வு 168 உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.
82 சதவீதத்தினர் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், 21 சதவீதம் பேர் தங்களுடைய முக்கியமான செயலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் 40 சதவீதம் பேர் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறினர். ஆனால் எப்போதும் தற்கொலை எண்ணம் வந்ததில்லை என்று கூறினர். |