• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    Flu வரமால் எப்படி தடுப்பது ?

    எப்படி Flu வராமல் தடுப்பது?
    Influenza அதற்க்கு இன்னும் ஒரு பெயர்தான் “flu “.இந்த வைரஸ்
    மூக்கு,தொண்டை,மற்றும் நுரையீரல் போன்றவற்றை தாக்குகிறது.

    flu வினால் வரக்கூடியவை

    பெரும்பாலும் காச்சல்,இருமல்,தொண்டை வலி,மூக்கடைப்பு,தலை வலி,உடம்பு வலி ,சோர்வு போன்றவை ஏற்படுத்துகிறது
    யாருக்கு வரக்கூடும் ?
    குழந்தைகள் 6 மதத்தில் இருந்து 19 வயது வரை
    வயதானவர்கள்
    கர்ப்பிணி தாய் மார்கள்
    நீண்டநாள் நோய்வாய் பட்டவர்கள்
    நோயாளிகளிடம் நேரடி தொடர்பு கொண்டவர்கள்
    பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பதிக்க படுவார்கள்

    எப்படி வராமல் பாதுகாப்பது :
    உங்கள் நோய் எதிர்பு சக்தியை கூடுவதன் மூலம் நீங்கள் வராமல் பாதுகாக்க முடியும்.வைட்டமின் C , எடுப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூடலாம்,Multivitamins எடுப்பது ,பழவகைகள்,காய்கறிகள் நன்றாக சாப்பிடுவது,போதுமான அளவு தண்ணீர் பருகுவது மிகவும் நல்லது.வைரஸினால் தக்கபடால், வாயை மூடிக்கொண்டு இருமுவது , கைகளை அடிக்கடி கழுவுவது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கமுடியும்.
    flu வைரஸினால் மிகவும் அவதி படுபவர்கள் தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் எடுத்து கொள்ளலாம்.

    யார் Vaccination எடுத்து கொள்ளலாம் ?
    6 மாதத்துக்கு மேலானவர்கள் அனைவரும் எடுத்து கொள்ளலாம்!

    யார் எடுத்து கொள்ள கூடாது ?
    முட்டை ஒவ்வாமை இருப்பவர்கள்
    flu shot மூலம் ஒவ்வாமை ஏற்கனவே ஏற்பட்டவர்கள்
    2 மாதத்துக்கு குறைந்தவர்கள்
    ஏற்கனவே காச்சல் இருக்கும் போது எடுத்து கொள்ள கூடாது

    எப்பொழுது எடுக்க வேண்டும் ?
    வைரஸ் அதிகமாக தாக்கும் காலங்களில் இருந்து அதாவது செப்டம்பர் மத்தில் இருந்து எடுக்கலாம்.

    தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு வராதா ?
    வரும், ஆனால் வைரசினால் ஏற்படும் தாக்கங்கள் குறைவாக இருக்கும் .

    எப்படி எடுத்து கொள்வது?
    shot , மற்றும் nasal spray மூலம் கிடைகின்றது,nasal spray 2 வயதுக்கு குறைந்தவர்கள் ,50 வயதுக்கு கூடியவர்கள்,எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்,ஆஸ்த்மா இருப்பர்வகள்,கர்ப்பிணி தாய் மார்கள் எடுக்க கூடாது !

    என்ன என்ன மருந்துகள் எடுக்கலாம் ?
    Antiviral Drugs இருக்கின்றன ,ஆனால் அவை அறிகுறி தெரிவதற்கு 2 -3 நாட்களுக்கு முன் எடுக்க வேண்டும் !

    வந்தால் என்ன செய்வது வேண்டும் ?
    வைட்டமின் C எடுப்பது,நிறைய தண்ணீர் அருந்துவது , போதுமான அளவு ஓய்வெடுத்து கொள்வது
    fever reducers, antihistamines, decongestants, and cough medicines கொண்டு தாக்கங்களை குறைக்கலாம்