• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    சூரிய மந்திரம்

    பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.
    ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்
    ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம்
    ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் அம்ருதாய நம: அமிழ்தமாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் ஜகதேக சக்ஷüஷே நம: உலகின் கண்ணாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் ஜகதாத்மனே நம: உலகுக்கு உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் மித்ராய நம: நண்பனாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் தபனாய நம: காய்ச்சுபவனாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் காலகாரணாய நம: காலத்தை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
    ஓம் தீவாகராய நம: பகலை உருவாக்குபவனுக்கு வணக்கம்
    ஓம் பாஸ்கராய நம: ஒளியை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
    ஓம் ககாய நம: வானத்தில் சஞ்சரிப்பவனுக்கு வணக்கம்
    ஓம் ரவயே நம: மாறுதலைச் செய்பவனுக்கு வணக்கம்
    ஓம் ஹம்ஸாய நம: பரமாத்மனுக்கு வணக்கம்
    ஓம் பூஷ்ணே நம: அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவனுக்கு வணக்கம்
    ஓம் ஜ்யோதிஷே நம: வெளிச்சமாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் ஹரண்யகர்பாய நம: அனைத்தையும் தன்னுள் அடக்கியவனுக்கு வணக்கம்
    ஓம் விச்வ ஜீவனாய நம: உலகம் முழுமைக்கும் உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் ஸஹஸ்ரபானவே நம: அளப்பரிய ஒளியுடையவனுக்கு வணக்கம்
    ஓம் மரீசயே நம: கதிரையுடையவனுக்கு வணக்கம்
    ஒம் ஸவித்ரே நம: உண்டுபண்ணுபவனுக்கு வணக்கம்
    ஓம் பிரத்யக்ஷதேவாய நம: கண்கண்ட தெய்வமாக இருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: பத்துத்திக்குகளிலும் ஒளிவீசுபவனுக்கு வணக்கம்
    ஓம் கர்மசாக்ஷிணே நம: செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வணக்கம்
    ஓம் அம்சமாலினே நம: கதிர்மாலையை உடையவனுக்கு வணக்கம்
    ஓம் ப்ரபாகராய நம: பிரபையை உண்டு பண்ணுகிறவனுக்கு வணக்கம்
    ஓம் சூரிய நாராயணாய நம: செயலை தூண்டும் இறைவனுக்கு வணக்கம்