கணணியில் உள்ள எழுத்துக்களின் எழுத்துரு, அளவு, வண்ணம் ஆகியவற்றை உங்களது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ள முடியும்.இதற்கு டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து அதன் எழுத்துரு, வண்ணம், அளவு தேர்வு செய்து ஓ,கே.தரவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும் வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம். |