ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச்சத்து இருக்கிறது. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. அதனால், உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. இது நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவது இல்லை. இருந்தாலும், முட்டையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.
இந்நிலையில், காலைநேர உணவாக 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் இயங்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். ஒரு நாள் முழுக்க மனிதன் இயங்குவதற்கு தேவையான சக்தியை முட்டை தருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
`ஒபிசிட்டி’ என்கிற உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்