உணவு பழக்கவழக்கம் காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் அதிக உடல் பருமனுடன் காணப்படுவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இப்படி எக்குத் தப்பாக உடல் எடை கொண்டவர்களின் ஆயுட்காலம் குறைகிறது என்று எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.
ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் வரையில் இவர்களது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் மிக மிக அதிக அளவில் குண்டாக இருப்பவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, சராசரி உடல் எடையைவிட 40 கிலோ அதிகமாக இருந்தால் இந்த ஆபத்து ஏற்படுமாம்.
இதேபோல், சராசரி உடல் எடையைவிட 18 கிலோ அதிகமாக இருப்பவர்கள், தங்கள் வாழ்நாளில் 3 ஆண்டுகளை இழக்கிறார்களாம்.
இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்டவர்கள், இன்னொரு அதிர்ச்சி குண்டையும் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். அதாவது, வாழ்நாள் முழுவதும் புகைப்பிடிப்பதும், அதிக உடல் எடையுடன் காணப்படுவதும் ஒரே மாதிரியான பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள் அவர்கள்.
நீங்களும் குண்டா?
இப்போதே உடல் எடையை குறைக்க ஆரம்பித்துவிடுங்கள். இல்லையென்றால்…