கனடா ஆராச்சிக்குழு ஒன்று முப்பது ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் மிதமாக ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு இதய நோய் சாத்தியக் கூறுகள் குறைவு என கண்டறிந்துள்ளனர்.ஆல்கஹால் அருந்துவது உடலுக்கு உகந்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின் இந்த முடிவு வெளியாகி உள்ளது. பிரிட்டனில் ஒரு யூனிட் ஆல்கஹாலில் 8 கிராம் சுத்த ஆல்கஹால் உள்ளது.
தொடர்ந்து மிதமாக ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு எல்லா வகை இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் 25 சதவீதம் குறைவாக உள்ளது. மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு ஆகிய பிரச்சனைகள் மிதமாகக் குடிப்பதால் குறைகின்றது.
இது குறித்து பேராசிரியர் வில்லியம் கலி கூறியதாவது: எங்களது ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் முடிவாக ஒன்று அல்லது இரண்டு முறை ஆல்கஹால் அருந்துவது நன்மை தரக்கூடியதே என்று கூறினார்.
இந்த ஆய்வு முடிவுகள் நாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உண்மையாக்குகின்றது என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் முதன்மை நர்ஸ் கேத்தி ரோஸ் கூறியுள்ளார். |