நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது அந்தக் குழந்தை பிறப்பு ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளாது என்று முன்னைய ஒரு இடுகையில் கூறியிருந்தேன்.
அதை தவறாகப் புரிந்து கொண்டு அவர்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவே கூடாது என்பது போல எண்ணிக் கொண்டு பல சந்தேகங்களைக் கிடைக்கப் பெற்றேன்.
நீரழிவு நோயுள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றாலும் அதை தடுப்பதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன.அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்.
நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க முன் கடைப்பிடிக்க வேண்டியவை…
முதலாவதாக அவர் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னம் அவரினுடைய சீனியை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்படும் அனைத்துப் பாதிப்புக்களுமே அம்மாவின் இரத்தத்தில் அதிக சீனி இருப்பதாலே ஏற்படுகிறது.ஆகவே அதை கட்டுப்பாட்டாக வைத்திருப்பதன் மூலம் பல பிரச்சினைகளைத் தடுக்க முடியும்.
மேலும் கர்ப்ப காலத்தில் வாய் வழியான நீரழிவுக்கான மாத்திரைகளை பயன் படுத்த முடியாது. அதனால் நீரழிவுக்கான மாத்திரை பாவிக்கும் பெண்கள் அவற்றை நிறுத்தி வைத்திய ஆலோசனை மூலம் இன்சுலின் ஊசிக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த பின்பு மீண்டும் மாத்திரைக்கு மாறிக் கொள்ள முடியும்.
அடுத்ததாக கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னமே அவர்கள் போலிக் அசிட் மாத்திரையை நாளைக்கு ஒன்று வீதம் பாவிக்க வேண்டும்